அளஹாபாத் நீதி மன்றத்தின் தீர்ப்பை எல்லோரும் மதிக்க வீண்டும், ஏற்றுக் கொள்ள வேண்டும் -- தீர்ப்பு வருவதற்கு முன்னர் மத சார்பற்ற கட்சிகளின் கோஷம் -- தீர்ப்பு வந்த பிறகு உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்கு காத்திருக்க வேண்டும். யாரும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வதற்கு முன்பே உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று மாண்பு மிகு உள்துறை மந்திரி கூறுகிறார். இவரது அவசரத்தைப் பார்த்தால், இவரே அப்பீல் தாக்கல் செய்து விடுவார் போல் இருக்கிறது. ஷா பானு வழக்கில் உச்ச நீதி மன்றத்தின் தீர்ப்பு என்ன கதி ஆனது என்பதை நினைத்துப் பார்த்தால் இவரது இரட்டை வேடம் புரியும். மொத்தத்தில் ராமர் கோவிலை கட்ட விட மாட்டோம், ராமர் பாலத்தை ( ராமேஸ்வரம்) இடித்தே தீருவோம் என்று உறுதியுடன் செயல்படும் சிதம்பரத்தை பாராட்டியே தீர வேண்டும். இந்த உறுதி இல்லாத நாம் பிருகன்னளையைப் போல புலம்புவதைத் தவிர வேறு என்ன செய்வது?
No comments:
Post a Comment