Wednesday, January 23, 2008

மத்திய அமைச்சர் கனிமொழி வாழ்க வாழ்க

கனிமொழி அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை. அவர் அமைச்சராவார் என்று வருகிற செய்திகள் உண்மையல்ல. அவை வதந்தியும் யூகமும் தானே தவிர வேறொன்றுமில்லை. அமைச்சர் ஆவதற்கு கனி ஆசைப்படவுமில்லை, அவரசப்படவுமில்லை.

முத்தமிழ் வித்தகர் கலைஞர் தானே கேட்டு தனக்காகக் கூறிய பதில.

சாணக்யன் கூறுகிறார்: ஐயா புல்லரிக்குதுங்கோ, இப்படித்தான் கனிமொழி அரசியலுக்கு வர ஆசைப்படவில்லை, அவர் M P ஆவார் என்பதெல்லாம் வெறும் வதந்தி என்று கூறினீர்கள். சில நாட்களிலேயே அவர் பதவியேற்றார் ராஜ்ய சபா M P ஆக. அதனால், கூடிய விரைவிலேயே மத்திய கேபினெட் அமைச்சராக கவிதாயினி கனிமொழியைப் பார்க்கக் கூடிய புண்ணியம் தமிழர்கள் எல்லோருக்கும் உண்டு என்பது நிச்சயம். என்ன தவம் செய்திருக்க வேண்டும் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம். கழகம் என்பது ஒரு குடும்பம் என்று அடிக்கடி கூறுவீர்களே, அதற்கு அர்த்தம் கழகம் என்பது "ஒரு குடும்பம்" என்பது எங்களுக்குப் புரிய லேட்டாயிட்டுதுங்க.

மறுபடியும் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா, உங்கள் மகள் கனிமொழியின் தோழி என்று இப்போது வந்துள்ள ஒரு புதிய கவிஞர் தமிழச்சி அவர்கள் தமிழ் மேல் உள்ள மிகுந்த ஆர்வத்தால் சுமதி என்ற தனது பெயரைத் தமிழச்சி என்று மாற்றிக் கொண்டுள்ளார்கள் என்று கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதில் சந்தேகம் என்னவென்றால், அவர்களுக்கு தமிழ்ப் பற்று எப்போது வந்தது? சிறு வயதிலிருந்தேவா? அல்லது பள்ளிப் பருவத்திலா? அல்லது கல்லூரிப் பருவத்திலா? அல்லது வேலைக்குச் செல்லும்போதா? அல்லது தனது தோழி பாரளுமன்ற உறுப்பினர் ஆன பிறகா? ஏன் கேட்கிறேன் என்றால், கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தவர்தான் இந்த தமிழச்சி. ஆங்கில இலக்கியத்தின் மேல் ஆர்வம் கொண்டு படித்தவர், கல்லூரியில் படிக்கும் போது தனது பெயரை "ஆங்கிலச்சி" என்று வைத்திருந்தாரோ? தமிழ் படிக்கக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று மற்றும் கூறி விடாதீர்கள் பெருந்தகையே! அது மட்டுமல்ல, ராணி மேரிக் கல்லூரியில் வேலை செய்ததும் ஆங்கில இலக்கிய விரிவிரையாளராக. அப்போது என்ன பெயர் வைத்திருந்தார்? இல்லை வழக்கம் போல தமிழுக்கு "வெளியிலுருந்து" ஆதரவு தெரிவித்திருந்தாரோ? அல்லது தாங்கள் பா.ஜ.க. உறவைத் துண்டித்துக் கொண்டு காங்கிரஸுடன் மறுபடியும் கை கோர்த்த போது கூறினீர்களே அது போலவா?

No comments: