என் எல் சி
பங்குகளை விற்பனை செய்வது குறித்து தமிழினத் தலைவர் கலைஞர் அன்னை சோனியாவுக்குக்
கடிதம்:
என் எல் சி
பங்குகள் விற்பனை முடிவை, தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளும்
எதிர்ப்பதைப் பற்றியும் 25 ஆயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளர்
அடங்கிய, 22 தொழிற்சங்கங்களும் எதிர்த்து வேலை
நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பது பற்றியும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.
(இல்லேன உங்களுக்கு அது தெரியாதா?)
கடந்த 2006ம் ஆண்டு தி மு க ஆட்சியில் இருந்த போது, என் எல் சி பங்குகளில் 10 சதவீதத்தை
விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு அறிவித்தது. (இப்போது 5 சதவீதம்தான். இது என்ன அநியாயம்?)
அப்போது தமிழக
அரசின் சார்பில் நான் தங்களுக்கும், பிரதமருக்கும்
கடிதம் எழுதியிருந்தேன். (அதே கடிதத்தின் ஒரு நகல்தான் இப்போதும் அனுப்புகிறேன்,
நாங்கள் என்றைக்கும் ஒரே பேச்சுதான்).
அப்போதும் அனைத்து எதிர்க்கட்சிகளும், தொழிலாளர்களும்
அதை கடுமையாக எதிர்த்தனர். (ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்க்கட்சியாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் நாங்கள் என்றைக்கும் எதிர்க்கவே மாட்டோம், வெறும் கடிதம் மட்டும் எழுதுவோம், காரியம் முடிந்தவுடன், நான் கடிதம்
எழுதியதால்தான் நடந்தது என்று மார்தட்டிக் கொள்வோம், நடக்காவிட்டால்......ஹி ஹி ஹி மறுபடியும்கடிதம் எழுதுவோம்...இது என்ன
பெண்ணுக்கு ராஜ்ய சபா சீட்டா அல்லது மகனுக்கு மந்திரி பதவியா... மக்கள்
பிரச்சினைதானே... கிடக்கட்டும்)
நிலைமை கடுமையான
பின் பங்குகளை விற்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது என்பதையும் தாங்கள்
மறந்திருக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்.
(கடுமையான நிலைமைக்குக் காரணம் அன்றைய எதிர்க்கட்சிகள்தான், நாங்களல்ல, ஆகவே தேர்தல் கூட்டணியின் போது எங்களை மறந்து விடாதீர்கள்). 2006ம் ஆண்டு கேட்டுக் கொண்டது போன்று தற்போதும் மீண்டும் கேட்டுக்
கொள்கிறேன். (பாத்தீங்களா, நாங்க பதவியில் இருந்தாலும்
இல்லாவிட்டாலும் எவ்வளவு பணிவாக இருக்கிறோம், தயவு செய்து எங்களைக் கைவிட்டு விடாதீர்கள்) 25 ஆயிரம் தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட பிரச்னை என்பதாலும், அவர்களது வேலை நிறுத்தம் நீடித்தால், மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்பதாலும் தாங்கள் இதை பரிசீலித்து
புங்குகளை விற்கும் முடிவை கைவிட ஆவன செய்ய வேண்டும். (மின் உற்பத்தி பாதித்தால் ஏற்கனவே இருக்கும்
மின்வெட்டுக்கான பழியை அம்மையார் நம் மீது சுமத்தி விடுவார், ஆகவே நஷ்டம் நமக்குத்தான்)
No comments:
Post a Comment