Thursday, January 31, 2008

FDI in Commodity Exchange

The Central Government has approved Foreign Direct Investment up to 26% in Commodity Exchange.  The repercussions of this move and the way all of us Indians are going to be affected will be exposed in my next posting, possibly in a couple of days.  And it will be bi-lingual.  Thank you for all those who are supporting my views.    Chanakyan.

Tuesday, January 29, 2008

If you are not hapy with the way media portrays women, mobilise friends from your college or from your colony, who share the same dicsontent, and write to the producers, directors or others concenned with the show or event you are not happy about. Bring about the change. Do not watch it and whine.
TNIE 30.01.2008


"Role of Media in Women Epowerment" என்ற தலைப்பில் சென்னையில் நடந்த கருத்தரங்கில் நடிகை கௌதமி பேச்சு.

எல்லாம் சரிதாங்கோ, நீங்கள் சினிமாவில் கதாநாயகியாக நடிக்கும் போதெல்லா பெண்களை மோசமாகச் சித்தரிக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் சக நடிகர்களிடம் உங்களது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளீர்களா? நீங்களே பெண்மையைக் கீழாகச் சித்தரிக்கும் பல படங்களில் நடித்துள்ளீர்களே, அப்போதெல்லாம் எங்கே போயிற்று உங்களது பெண் முன்னேற்றக் கொள்கைகள்? ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும்போது மட்டும் வருவதற்கு பெண் சுதந்திரம் என்ன பென்ஷனா?

Sunday, January 27, 2008

ஆண்களுக்கு ஓரிரு வார்த்தை.

இந்த உலகத்தில் எல்லாமே இரண்டாகத்தான் உள்ளது. இரவு பகல், வெளிச்சம் இருள், சத்தம் நிசப்தம், மேடு பள்ளம், வெப்பம் குளிர்ச்சி, உயர்வு தாழ்வு, வெற்றி தோல்வி என எல்லாமே இரண்டு வகைப்படும். இந்த இரண்டும் சேர்ந்ததுதான் உலகம். இவற்றில் எதனையும் நீங்கள் ஒதுக்கித் தள்ள முடியாது. ஏனேனில் இவை இரண்டும் complementary in nature. வெற்றி என்ற ஒன்று வேண்டுமானால் அது அடுத்தவனின் தோல்வியில்தான் கிடைக்கிறது. உங்களுக்கு இரவானால் அது மற்றொரு பாகத்தில் பகலாகிறது.

அது போலத்தான் எல்லா ஜீவராசிகளிலும் ஆண் பெண் என்று இரண்டாகப் படைத்தான். இவை ஒவ்வொன்றும் ஒரு அரை வட்டம், அதாவது விட்டம் போன்றது. இரண்டு விட்டங்கள் ஒன்று சேர்ந்தால்தான் அது வட்டம் எனும் முழுமையை அடைகிறது. (அதற்காக இரண்டு ஆணும் அல்லது இரண்டு பெண்ணும் ஒன்று சேர்ந்து நாங்கள் ஒரு வட்டம் போடுகிறோம் என்று சொல்லாதீர்கள், அது மகா மட்டம்). அது சேராதபோது அது முழுமை அடைவதில்லை. இரண்டு விட்டங்களிலே எது பெரியது அல்லது எதி சிறியது என்று கூற முடியுமா? இரண்டுமே சரி பாதிதான்.

மனிதனை விடக் கீழானது என்று நாம் கருதுகிறோமே மற்ற விலங்குகள், அவை நம்மை விட அறிவு வாய்ந்தவை. நாம்தான் நமக்கிருப்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் அறிவைக் கொண்டு இந்த உலகத்தையே கெடுத்துக் கொண்டிருக்கிறோம். எந்த சேவலும் நான் கோழியை விட உயர்ந்தவன் என்று கூறுவதில்லை. எந்த ஆண் மயிலும் நான்தான் அழகானவன் என்று தன் தோகையே விரித்து பெருமை பேசியதில்லை. ஆனால் இயற்கையிலேயே எல்லா ஜீவராசிகளிலும் ஆணினம்தான் அழகாகப் படைக்கப் பட்டிருக்கிறது. ஆண் சிங்கம், ஆண் யானை, சேவல், ஆண் மயில் என எல்லாவற்றிலும் ஆணினம்தான் அழகு (ஆனால் மனிதனில் மட்டும்தான் இது மாறிவிட்டது என பெண்கள் கத்துவது கேட்கிறது)

சரி இப்போது விஷயத்துக்கு வருவோம்.

ஆண்களை மிகவும் கேவலப்படுத்தக் கூடிய ஒன்று வரதட்சணை. எதற்காக இந்த வரதட்சணை? பிள்ளை வீட்டார் சொல்வது:"இத்தனை நாள் இந்தப் பிள்ளையை வளர்த்து படிக்க வைத்து ஒரு வேலையில் அமர்த்தியிருக்கிறோமே, அதற்காக நீங்கள் வரதட்சணை கொடுக்க வேண்டும்".

இது எப்படித் தெரியுமா இருக்கிறது, ஒரு நாய்க் குட்டியை வளர்த்து, அதற்கு பல வித்தைகளையும் சொல்லிக் கொடுத்து, நல்ல விலைக்கு விற்பது போலிருக்கிறது. ஆனால், நாயை விற்றால் அத்தோடு நாய் வாங்குபனுக்குச் சொந்தம் ஆகி விடுகிறது. ஆனால் மனிதக் குட்டி மட்டும் வாங்கியவனுக்குச் சொந்தமில்லை.

சில்ருக்கு ம்ட்டும் வரதட்சணை வாங்க வேண்டாம் என்று நான் சொல்ல மாட்டேன். அந்த விதி விலக்குகள் இந்தக் கட்டுரையின் முடிவில் உள்ளது.

சாமிகளா, கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், கல்யாணம் ஆனவுடன் ஏதொ ஒரு மனஸ்தாபம் உங்களுக்குள் வருகிறது. அப்போது மனைவியை விட்டு விட்டு நீங்கள் மட்டும் வண்டியில் ஏறிப் போகிறீர்கள். அப்போது உங்கள் மனைவி வாசலில் நின்று உங்களைப் பார்க்கும் பார்வைக்கு அர்த்தம் என்ன தெரியுமா? "அட மானங்கெட்டவனே, நான் மட்டும் வேண்டாம், எங்கப்பன் வாங்கிக் கொடுத்த வண்டி மட்டும் வேண்டுமா?" ஆண்கள் பெண்களை விட உயர்ந்தவர்கள் என்று நம்பிக் கொண்டிருக்கும் ஆத்மாக்களே, தேவையா இந்த கேவலம்?

ஆண்களின் பதில் என்னவென்றால். "நாங்கள் என்ன செய்வது! எல்லாம் எங்க அம்மாவின் ஆசை. அவர்களின் ஆசைக்கு நாங்கள் தடை போட முடியாது. எனக்கு எல்லாமே எங்க அம்மாதான். அவர்களை எதிர்த்து நான் ஒரு வார்த்தை கூட பேச மாட்டேன்". அட நாதரிப் பசங்களா, நல்ல விலை படியாவிட்டால் உங்கம்மா உங்களிடம் வந்து "மகனே உனக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. ஆகவே, உன்னை அடிமாட்டு விலைக்கு விற்பதை விட, விற்காமல் சும்மாவே வைத்திருக்கலாம் என்று முடிவு செய்து விட்டேன். ஆகவே நீ பிரம்மச்சாரியாகவே இருந்து விடு" என்று சொன்னால் அதுவும் அம்மாவின் ஆசைதானே என்று சரி சொல்லுவீர்களா?

அல்லது அதிக வரதட்சணைக்கு ஆசைப்பட்டு ஒரு அதிபயங்கர குரூபிக்குக் கட்டி வைத்தால் ஒப்புக்கொள்வீர்களா?

நிச்சயம் இது இரண்டும் நடக்காது.

ஆகவே அம்மாவின் ஆசை, அவர்கள் பேச்சைத் தட்ட மாட்டேன் என்பதெல்லாம் சும்மா பிலிம். இவனுக்குன் உள்ளுக்குள் ஆசை உண்டு. நோகாமல் நோம்பு கும்பிட நம் ஆளுங்களை விட்டால் வேற யாருண்டு?

பெண்மணிகளே, வரதட்சணை குடுத்து கலியாணம் செய்து கொண்டு போகிறீர்களா? சமயம் கிடைக்கும் போதெல்லாம், நீங்கள் கொண்டு வந்த சீர்வரிசை மற்றும் வரதட்சணையைப் பற்றிப் பேசிக்கொண்டே இருங்கள். அப்போதுதான் அவனுக்குள் இருக்கும் வறட்டு கர்வம் அடங்கும். இப்படியெல்லாம் பேசினால் அடித்து உதைத்து கொடுமைப்படுத்துகிறானா? அல்லது விவாகரத்து என்று பேசுகிறானா? கவலையே படாதீர்கள், இன்னும் சற்று அதிக வரதட்சணை கொடுத்தால், இன்னும் நல்ல மாடல் மாப்பிள்ளையை விலைக்கு வாங்கலாம்.

ஆண்களே, விலைக்கு விற்கும் நாய்களா நீங்கள்? விலங்குகளை விட உயர்ந்தவன் மனிதன். அந்த மனிதர்களிலே உயர்ந்தது ஆணினம் என்று கர்வம் கொண்டு நடக்கிறீர்களே, உங்கள் நிலைமை இதை விடக் கேவலமாகப் போக முடியாதப்பா. ஒரு ஆண் என்பவன் பெண்ணைத் தனது ஆண்மையாலே கட்டிப் போட வேண்டும். (ஆண்மை என்று நான் கூறுவது, பழனி சித்தர் சிட்டுக்குருவி லேகிய சமாசாரம் இல்லை). ஆண்மை என்பது சொல்லிலே, செயலிலே, கம்பீரத்திலே, நடையிலே உள்ளது. வள்ளுவர் "பிறன் மனை நோக்காப் பேராண்மை" என்று கூறுகிறாரே அதுதான் ஆண்மை. படுக்கறையிலே காட்டுவதல்ல ஆண்மை. காசு கொடுத்து வாங்கப் படும் ஆண்மகனிடம் ஆண்மை உள்ளதாக ஒரு பெண் எண்ணுவாளா? ஆரம்பமே அசிங்கமாக இருக்க வேண்டுமா?

உங்கள் மனைவியின் மனதிலே முதலில் ஒரு உயர்ந்த இடத்தைப் பிடியுங்கள். அப்போதுதான் உங்கள் வாழ்க்கை கடைசி வரையில் சந்தோஷமாக இருக்கும்.

சரி, சில பேர் மட்டும் வரதட்சணை வாங்கலாம் என்று சொன்னேனல்லவா! அந்தப் பட்டியல் இப்போது:

கோழைகள், முதுகெலும்பில்லாதவர்கள், ஜடங்கள், வெக்கங்கெட்டவர்கள், காறித்துப்பினாலும் ரோஷம் வராதவர்கள், தான் மிகவும் கேவலமான பிறவி எந்த உண்மையை உணர்ந்தவர்கள், பொட்டைகள் (பெண்கள் மன்னிக்கவும், இந்த வார்த்தைக்குப் பெண்கள் என்று அர்த்தம் கிடையாது, பொட்டைக் கண் என்றால் ஒன்றுக்கும் உதவாத கண் என்று பொருள்), கையாலாகாதவர்கள் போன்றோர் மட்டும் வரதட்சணை வாங்கலாம்.

சாணக்யன்.

Friday, January 25, 2008

பெண்ணுக்கு எதிரி யார்?


பெண்ணுக்கு எதிரி யார்? 


சொன்னால் அடிக்க வருவார்கள் பெண்ணுரிமைவியாதிகள். ஆனால் பல நேரங்களில் பெண்ணுக்கு எதிரி பெண்ணேதான்.

முதல் எதிரி மாமியார் ரூபத்தில். மாமனார் கொடுமை என்பது ஏதாவது சில இடங்களில்தான். ஆனால் மாமியார் கொடுமை என்பது எல்லா இடங்களிலும். மாமியாரும் ஒரு பெண்தானே? பின் ஏன் ஆண்கள்தான் பெண்களுக்கு எதிரி என்பது மாதிரிப் பேசுகிறீர்கள்?


தனது பெண் தாய் வீட்டிற்கு வந்தால் "பாவம், சில நாளாவது அவள் தாய்வீட்டில் ஓய்வு எடுத்துச் செல்லட்டும்" என்று சொல்லும் தாய், தனது மருமகள் அவள் தாய் வீட்டிற்குச் சென்றால் மட்டும் பொருமுவது ஏன்?

தனது பெண் வாழச் செல்லும் வீட்டில் மாமியார் மற்றும் நாத்தனார் இருக்கக் கூடாது என்று நினைக்கும் பெண்கள், தான் மட்டும் மகனோடு இருக்க வேண்டும் என்று நினைப்பது ஏன்?

தன் மகளைத் தனிக் குடித்தனம் போகச் சொல்லும் தாய், தனது மகனை அவ்வாறு போகாதே என்று தடுப்பதன் காரணம் என்ன?

தான் பெற்ற துன்பம் பெறுக தனது மருமகள் என்பது தானே?

பெண்கள் தங்களது சிறப்பம்சமாக நினைப்பது தங்கள் புற அழகை மட்டும்தான். அதற்காக நான் பெண்கள் ஆண்களைப்போல தலை முடியைக் கத்தரித்துக் கொண்டு லுங்கி சட்டை அணிந்து கொண்டு தங்களை கோரப் படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் அழகுதான் தனது ஆயுதம் என்று நினைக்காதீர்கள்; அது நம்ப முடியாத ஆயுதம்; இதை விட வலிமையான ஆயுதம் பிற பெண்களிடத்தில் இருக்கும் போது உங்கள் ஆயுதம் தோற்றுப் போகும். அது மட்டுமல்ல, ஒரு கால கட்டத்திற்குப் பிறகு நிராயுதபாணியாக நிற்பீர்கள்.

நானும் பல தம்பதிகளைப் பார்த்திருக்கிறேன். பொருந்தாத் திருமணங்கள் என்று நான் எண்ணியவை அவை. ஒன்று கணவன் நன்றாக இருக்க மாட்டார் அல்லது மனைவி நன்றாக இருக்க மாட்டார். சில பெண்களைப் பார்க்கும்போது இவர்களுக்கு எப்படி கல்யாணம் ஆகும் என்று நினைத்திருக்கிறேன். இப்போது அவர்கள் தங்கள் பிள்ளைகளுடன் வரும்போது புன்னகைக்கிறேன். அவர்கள் மண வாழ்வு மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறது.

ஆனால் மிகவும் பொருத்தமான ஜோடி என்று கருதிய பலர் இன்று மகிழ்ச்சியற்று, சில இடங்களில் பிரிந்தும் இருக்கின்றனர். ஆகவே அழகு என்பது அன்புக்கு அடையாளமாகாது.

உடனே ஆணழகன் என்பது என்ன? ஆண்களும் அப்படித்தானே என்று வாண்டுகள் கிளம்ப வேண்டாம். ஆணழகன் போட்டியில் முயற்சியுடைய எல்லோரும் பங்கு கொள்ளலாம். உடற்பயிற்சிதான் முக்கியம். பிறப்பால் பெற்ற நிறமோ அல்லது முக லட்சணமோ அல்ல. உலக அழகிப் போட்டிகள் அப்படி அல்லவே! சமீபித்தில் சீனாவைச் சேர்ந்த ஒருவர் உலக அழகியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். எனது நண்பர்கள் பலர் கேட்டனர் "மச்சி, இதையெல்லாம் எப்படிடா போட்டியிலே நுழைய விட்டார்கள்" இதன் உண்மையான நோக்கம் இதுதான். எங்கெல்லாம் அழகிகள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ அங்கெல்லாம் பன்னாட்டு காஸ்மெடிக் கம்பெனிகள் வியாபாரத்தை ஆரம்பிக்கப் போகின்றார்கள் என்று அர்த்தம்.

அடுத்தது பெண்கள் படிக்கக் கூடாதா?

அம்மணி, பெண்கள் படிக்க வேண்டும், தாராளமாக, ஏராளமாகப் படிக்க வேண்டும். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தை நினைவில் கொள்ள வேண்டும். படிப்பு என்பது வேலை பார்க்கத்தான் என்று நினைக்காதீர்கள். கல்வி என்பது அறிவுக்காகத்தானே தவிர பணத்துக்காக அல்ல. இப்படி தவறாக நினைப்பதால்தான் பெண்கள் வேலக்குப் போகக்கூடாது என்று சொன்னால் உடனே நான் படித்த கல்வி வீணாகப் போவதா என்று சண்டைக்கு வந்து விடுகின்றனர். கல்வி என்றும் அழியாது. வீணாகப் போவதற்கு அது என்ன முந்தா நாள் ஃப்ரிட்ஜில் வைத்த தக்காளி ரசமா?

அடுத்தது பெண்கள் முன்னேற்றம் என்பது ஆண்களைக் காப்பிஅடிப்பது, அவர்கள் செய்வதையெல்லம் செய்வது என்று நினைக்காதீர்கள். ஆண்களுக்கென்று சில குணாதிசயங்கள் உள்ளன அது போல பெண்களுக்கென்று சில குணாதிசயங்கள் உள்ளன. அதனை மாற்ற நினைக்காதீர்கள். ஆனால் இன்று பெண்ணுரிமை பேசும் பலரும், ஆண்கள் செய்யும் வேலைகளை நாங்களூம் செய்வோம், அதுதான் பெண் சுதந்திரம் என்று நினைக்கின்றனர். சுஜாதா சொல்வது போல, ஒரு ஆணால் சுவற்றோரம் அசிங்கம் செய்ய முடியும், வெய்யில் காலத்தில் ஒரு அரை டரௌசருடன் சுற்ற முடியும். ஆஸ்த்ரேலியாவின் பலம் வேகப் பந்து வீச்சு. அதை நம்மால் ஈடுகட்ட முடியாது. அப்படிச் செய்ய எண்ணியதால்தான் தோற்றோம். பிறகு நமது பலமாகிய ஸ்பின் நமக்குக் கை கொடுத்தது. ஜெயித்தோம். ஆகவே நமது பலம் என்ன என்பதை உணர்ந்து அதில் கவனம் செலுத்திடுவோம். போராட்டம் என்பது நமது களத்தில், நமது தளத்தில் இருக்க வேண்டும்; எதிரியின் இஷடப்படி அல்ல.

சுதந்திரம் என்ற பெயரில், கல்யாணம் செய்யாமல் சேர்ந்து வாழ்வது, உடலின் பல பாகங்களும் தெரியும்படி ஆடை அணிவது போன்ற வக்கிரங்களுக்கு முடிவேயில்லை. இதுவா சுதந்திரம்? நம் உடலை எல்லோருக்கும் காட்சிப் பொருளாக்குவதா புதுமை? ஏன் பார்க்கிறீர்கள் என்று திருப்பிக் கேட்காதீர்கள். பார்ப்பதற்காகத்தானே திறந்து போடுகிறீர்கள்? மேலும் அதுதான் உங்கள் அழகு, பலம், சொத்து என்று சொல்லிக் கொள்ளும் போது, உங்கள் சொத்தை நாங்களும் மதிப்பிடிகிறோமே!


ஒரு ஆண் நான்கு மனைவிகளைத் திருமணம் செய்து கொள்ளலாம், ஆனால் பெண்ணுக்கு அந்த சுதந்திரம் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய போது அவரிடத்திலே கேட்டார்கள் பெண்ணுக்கு மட்டும் ஏன் இந்தக் கட்டுப்பாடு என்று.

அவர்கள் நாலு பாத்திரங்களில் பாலை ஊற்றச் செய்தார். பிறகு அவற்றில் ஒரு பாத்திரத்திலுருந்து ஒருகரண்டி மோரை ஊற்றச் செய்தார். இப்போது அந்த நான்கு பாத்திரத்திலிருந்த பாலும் சிறிது நேரத்தில் தயிரானது. இப்போது எந்த மோரினால் இந்த நான்கு பாலும் தயிரானது என்று கூற முடியும்.

அதேபோல், ஒரு பாத்திரத்தில் பாலை வைத்து நான்கு பாத்திரங்களில் இருந்த மோரை ஒவ்வொரு கரண்டியாக ஊற்றினார்கள். இப்போது கூறுங்கள் எந்த மோரினால் இந்தப் பால் தயிரானது என்று கூற முடியுமா?

 

இது பெற்றோர் யார் என்று முடிவு செய்வது மட்டுமன்று. இதன் பின் பல சிக்கல்களும் உள்ளன. நான்கு மணம் அனுமதி அளித்தது கூட யுத்தத்தில் பெருமளவு ஆண்கள் இறந்து விட்டதால்தான். அது மட்டுமன்றி விதவைகளின் திருமணத்தை ஆதரித்தவரும் அவர்தான்.

முதலில் பெண்கள் சுதந்திரம் என்ற பெயரில் வேண்டுவன என்ன என்பதைப் பட்டியலிடுங்கள். எது வேண்டும் என்று தெரியாமலே போராடுவது எதனையும் பெற்றுத் தராது.

பொருளாதார சுதந்திரம் என்பது ஒன்று. அம்மணிகளே, ஒரு ஆண் சம்பாதிப்பதை எல்லாம் அவனே செலவு செய்வது என்பது முடியாத காரியம். அவனுக்குக் குடும்பம் என்று ஒன்று இருக்கிறது. அப்படி குடும்பத்தைக் கவனிக்காதவர்கள், தறுதலைகள். இதுவா நீங்கள் வேண்டும் சமத்துவம்? அது மட்டுமல்ல, கணவன் மனைவி இருவரும் பணி புரியும் குடும்பங்களில் இது ஒரு முக்கியமான பிரச்சினை. இது சம்பளம் உபரியாக இருக்கும் குடும்பங்களில் பிரச்சினையில்லை. பட்ஜெட் போட்டு வாழும் குடும்பங்களில், மனைவி தனியாகச் செலவழிக்க ஆரம்பித்தால், திடீரென்று ஒரு தேவை என்று வரும்போது கடன் கேட்பது ஆண்கள்தான்; பெண்களல்ல. பெண்கள் கடன் கேட்டால் உடனே கொடுக்க ஆயிரம் பேர் இருக்கிறார்கள். ஆனால் அதன் பின் விளைவுகளை எண்ணிப் பார்த்தீர்களா? ஆண்களளில் பெரும்பாலானோர் எப்போதும் பெண்களை போகப் பொருளாகவே எண்ணுகின்றனர் (வெட்கக் கேடானா உண்மை,ஆனால் இதிலும் பெண்களின் பங்கு இல்லாமல் இல்லை), இந்த நிலையில் பெண்கள் கடன் கேட்க வேண்டுமா?

அடுத்தது முடிவெடுக்கும் சுதந்திரம். ஏற்கனவே சொன்னது போல ஒரு பெண் வெளியுலகத்தில் ஒரு விஷயத்தை எதிர்கொள்ளும்போது அவள் பெண் என்ற விஷயமும் கருத்தில் கொள்ளப் படுகிறது. It creates a bias and unfavaroble situations for all, most of the times detrimental to the woman.

கூட்டாட்சி தத்துவம் என்பது வீட்டுக்கும் சரி, நாட்டுக்கும் சரி உதவாது. இந்தக் கண்றாவியைத்தான் கடந்த சில வருடங்களாகப் பார்த்துக் கொண்டிருக்கிறோமே?

ஒரு குடும்பத்தில், ஒருவர் Dominating ஆகவும் ஒருவர் submissive ஆகவும் இருக்க வேண்டும். இரண்டும் ஒரே மாதிரி இருந்தால் அது வேலைகாவாது. ஒருவர் மூளையாகவும் ஒருவர் இதயமாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் ஈருடல் ஓருயிர். இரண்டு மூளைகள் இருந்தால் சீக்கிரமே போக வேண்டியதுதான்.

மீண்டும் சந்திப்போம்.






திருந்தாத ஜென்மங்கள்

இரண்டு தாரம் உண்டு என ஜோசியர் கூறியதால் முதல் மனைவியை உதறிய கணவர் மீது புகார் -- தினமலர் 26.01.2008 செய்தி.

இந்த ஜென்மங்களையெல்லாம் யார்தான் திருத்துவது? அது சரி, கல்யாணம் பண்ணிக் கொள்ள இவ்வளவு அவசரமா இந்த அம்மணிக்கு! அப்பா ரிடையர்ட் டி எஸ் பி. சற்று யோசித்து செய்திருக்கக் கூடாதா? பார்க்காமலே போனில் காதலாம். ஐயா அகத்தியரே, நீங்கள் பத்த வச்சது எப்படி வெடிக்குது பாத்திங்களா?

ஆணுக்குப் பெண் சமமா?

ஆண்களுக்குப் பெண் சமமா? ஆணை விடப் பெண் தாழ்ந்தவளா? ஆண்களைப் போலப் பெண்களும் எல்லாத் துறைகளிலும் வித்தியாசமின்றி நுழையலாமா? பெண்களுக்கு அடுப்பறைதான் உலகமா? வேலைக்குப் போகும் பெண்களை விட இல்லத்தரசிகள் தாழ்ந்தவர்களா?

இந்த எல்லாக் கேள்விகளுக்கும் என்னால் முடிந்த அளவுக்கு விடையளிக்க முற்பட்டுள்ளேன். நிதானமாக முழுவது படித்து விட்டு பின்பு கருத்தொலி(Feed Back) செய்யவும்.

ஆண்களுக்குப் பெண் என்றும் சமமாக முடியாது. இரு பொருள்கள் சமமில்லை என்றால் அவற்றுள் ஒன்று உயர்ந்தது மற்றொன்று தாழ்ந்தது என்று அர்த்தமாகாது. சதுரங்கம் ஒரு விளையாட்டு. கால்பந்து ஒரு விளையாட்டு. கிரிக்கெட் ஒரு விளையாட்டு. இவற்றுள் எது எதற்குச் சமம்? அல்லது எது எதற்குத் தாழ்ந்தது அல்லது உயர்ந்தது? கூற முடியுமா உங்களால்?

எல்லாம் விளையாட்டுக்கள் தானே?

சரி அடுத்த உதாரணத்திற்குப் போவோம்.

நம்மைப் பொறுத்தவரை சாலையில் போகும் எல்லா மாடுகளும் ஒன்றுதான், அது காளையா அல்லது என்று பசுவா என்று நாம் ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை. நம் கவலை எல்லாம் அது நம் மேல் முட்டக்கூடாது அல்லது நம் வண்டி அதன் மேல் மோதக் கூடாது.

ஆனால் பசுவும் காளையும் ஒன்றாகுமா? அல்லது ஏதாவது ஒன்று உயர்ந்ததா? பசுவின் வேலை கன்றுகளை ஈனுவடு மற்றும் பால் தருவது; காளையின் வேலை வண்டி இழுப்பது, ஏரில் வயலை உழுவது. வேலை எதுவும் செய்யவில்லை என்பதற்காகப் பசுவைத் தாழ்ந்தது என்றும் கஷ்டப்பட்டு வயலில் வேலை செய்வதால் காளையை உயர்ந்தது என்றும் சொல்லலாமா?
சமத்துவம் என்று சொல்லி, காளையில் பால் கறந்து பசுவை ஏரில் பூட்ட முடியுமா?

ஒரு விவசாயி எனக்கு பசு மட்டுமே போதும் என்றோ அல்லது காளைகள் மட்டுமே போதும் என்றோ சொன்னால் அவனைப் பார்த்து இந்த உலகம் சிரிக்கும்.

நம் மூளையில் இடது மூளை, வலது மூளை என்று இரண்டு பிரிவுகள் உள்ளது. வலது பக்க மூளை உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களை ஆள்வது. இடது பக்க மூளை அறிவுப்பூர்வமான விஷயங்களை ஆள்வது. எனக்கு உணர்ச்சிகளே தேவையில்லை, ஆகவே எனக்கு இடது மூளையே போதும் என்று சொல்ல முடியுமா?

அல்லது வலது மற்றும் இடது இரண்டுமே எனது மூளைதான் ஆகவே நாளை முதல் நான் உணர்ச்சிப் பூர்வமான விஷயங்களை எனது இடது பக்க மூளையிலேதான் முடிவு செய்வேன் என்று யாராவது சொல்ல முடியுமா?

வலது கைக்கென்று சில வேலைகள் உண்டு; இடது கைக்கென்று சில வேலைகள் உண்டு. இரண்டுமே எனது கைதானே, ஆகவே இரண்டு கைகளிலும் எந்த வேலையையும் நான் செய்வேன் என்று கூற முடியுமா?

ஆண், பெண் இரண்டு பேருமே இரு பக்க மூளைகள் போன்றவர்கள். அவரவர்களுக்குள்ள வேலைகளை அவர்கள் ஒழுங்காகச் செய்தாலே போறும்; யார் உயர்ந்தவர், யார் தாழ்ந்தவர் என்ற எண்ணமே வராது.

இரண்டு பக்க மூளையும் செயல்பட்டால்தான் ஒரு மனிதன் இயங்க முடியும். ஒரு பக்க மூளை பழுது பட்டாலும் அவன் இயங்க முடியாது.

அது போல ஆணின்றிப் பெண்ணும், பெண்ணின்றி ஆணும் இந்த உலகில் இயங்க முடியாது. இதுதான் உண்மை. இரண்டும் ஒன்று சேர்ந்தாலே அது முழுமையான இயக்கம். ஒன்றில்லாமல் மற்றொன்றில்லை எனும்போது உயர்வு தாழ்வு எங்கிருந்து வந்தது?

ஒரு ஆணுக்குத் தாழ்வு மனப்பான்மை இருக்கும்போதுதான் அவன் தன்னை உயர்ந்தவன் என்று காட்டிக் கொள்ள தன்னை விட பலத்தில் குறைந்த பெண்ணைத் தன்னை விட தாழ்ந்தவள் என்று கூறுகிறான்.

சாணக்யன் சொல்வது என்னவென்றால், பெண்ணை நீங்கள் தெய்வமாகத் தொழவும் வேண்டாம்; அவளைக் கீழே போட்டு மிதிக்கவும் வேண்டாம். எப்படி அவளுக்கு நீ தேவையோ அதுபோல உங்களுக்கும் அவள் தேவை. வண்டி ஓடுவதற்குச் சக்கரம் தேவையா அல்லது அச்சாணி தேவையா? சக்கரம் பெரியதாக இருந்தாலும் சிறிய அச்சாணி இல்லாமல் ஓடாது. அச்சாணி கூர்மையாக இருந்தாலும், சக்கரத்துடன் சேர்ந்தால்தான் அது பயன் தரும்; ஓடும். இரண்டும் ஒன்றாக இருந்தால்தான் பிரயோஜனம். தனித்தனியே இருந்தால் அது யாருக்கும் பயன்படாது.


அடுத்தது பெண்கள் எல்லாத் துறைகளிலும் ஈடுபடலாமா? பெண்களின் முக்கிய வேலை குழந்தைகளை நன்முறையில் வளர்ப்பது. உடனே நான் பெண்களைக் கட்டிப் போடுகிறேன் என்று கிளம்பி விடாதீர்கள். குழந்தை வளர்ப்பது என்பது சாமானியமான காரியமில்லை. அது மட்டுமல்ல, அது மற்றவர்கள் பொறுப்பில் விட அது சாதாரண விஷயமுமில்லை. இன்றைய குழந்தைகள் நாளைய இந்தியா. அத்தோடல்லாமல், அவர்கள்தான் பெற்றோர்களை நாளை காக்கக் கூடியவர்கள். பாசத்துடன் வளர்ப்பதுதான் முக்கியமே தவிர, பணத்துடன் வளர்ப்பது அல்ல. குடும்ப உறவுகள் குறைபட்டுப் போன மேல் நாடுகளைப் பார்த்தாவது நாம் திருந்த வேண்டாமா?

வேலைக்குப் போகும் பெண் வீட்டில் இருக்கும் இல்லத்தரசியை விட மேலானாவரா?

இது போல ஒரு கருத்து பெண்களிடையேதான் அதிகமாகக் காணப்படுகிறது. வீட்டில் இருப்பது கேவலம்; வேலைக்குப் போவதுதான் சிறப்பு என்று பல புதுமைப் பெண்கள் நினைக்கிறார்கள். அம்மணிகளே, அப்படி நீங்கள் நினைத்தால், இது நாள் வரை வேலைக்குச் சென்று கொண்டிருந்தது ஆண்கள் மட்டுமே; அப்படியானால் அவர்கள் தாங்கள்தான் உயர்ந்தவர்கள் என்று நினைத்தது தவறல்லவே. ஆகவே வேலைக்குப் போகும் பெண்கள்தான் மேலானவர்கள்; இல்லத்தரசிகள் கீழானவர்கள் என்ற தவறான எண்ணம் யாருக்கும் வேண்டாம். வேலைக்குப் போவது என்பது அவரவர்கள் பொருளாதாரத்தைப் பொறுத்தது மட்டுமே; புத்திசாலித்தனத்தைப் பொறுத்து அல்ல.



மீண்டும் சந்திப்போம்.
சாணக்யன்:

Thursday, January 24, 2008

வள்ளுவர் ஓர் இந்துவாக நிச்சயம் இருக்க முடியாது.

வள்ளுவர் இந்துவா? பல தமிழர்கள் இந்து மதம் நமது மதம் என்ற அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.

தமிழ் நூலான திருக்குறளை இந்து மத நூலாக எண்ணத் துணிகின்றனர். இந்து மதத்தின் மிக முக்கிய நூலான பகவத் கீதை கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது.-நரபலிக்கும் நியாயம் கற்பிக்கிறது.

--இளங்கோ (இலண்டன்)


காலஞ் சென்ற கவியரசர் கண்ணதாசன் அவர்கள், தனது அர்த்தமுள்ள இந்துமதம் இரண்டாம் பகுதியில் வள்ளுவர் ஓர் இந்து என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். இறுதியில் தமிழரான வள்ளுவர் ஓர் இந்து; இந்துவான வள்ளுவர் ஒரு தமிழரே என்று அந்தக் கட்டுரையை முடிக்கின்றார்.

கவியரசர் கண்ணதாசனைப் போன்று பல தமிழர்கள் இந்து மதம் நமது மதம் என்ற அறியாமையில் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.மூழ்கிக் கிடப்பதோடு மட்டுமல்லாது, மதச்சார்பற்ற நமது பெருந்தமிழ்ப் புலவர் வள்ளுவரை இந்துவாக நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். அத்துடன் ஈடு இணையற்ற தமிழ் நூலான திருக்குறளை இந்து மத நூலாக எண்ணத் துணிகின்றனர்.

இவ்வாறு திருவள்ளுவரை இந்துவாகவும், திருக்குறளை இந்துத்துவம் சார்ந்ததாகவும் பலர் நினைப்பதற்கு பார்ப்பனரான பரிமேலழகர் எழுதிய திருக்குறளுக்கான விளக்க உரையும் ஒரு முக்கிய காரணமாகும்.

குறள்களுக்கு தவறான பார்ப்பனிய விளக்கம் கொடுத்து திருக்குறளின் அர்த்தத்தை பரிமேலழகர் திரித்து விட்டார் என்பதுதான் உண்மை.

ஆனால் நமது வள்ளுவப் பெருந்தகையோ இந்து மதத்தையும், அதனை இயக்கும் கருவியான பார்ப்பனியத்தையும், இந்து மதத்தின் ஆணிவேராக விளங்கும் வருணாசிரம தர்மத்தையும், மற்றும் இந்து மதத்தின் மூடப் பழக்க வழக்கங்களையும் தனது குறட்பாக்கள் வழியாக சாட்டையடி கொடுப்பதுபோல் கடுமையாகச் சாடுகிறார்.

பிறப்பினால் ஏற்றத் தாழ்வுகளைக் கற்பிக்கும் வருணாசிரம தர்மம். குறிப்பாக பகவத்கீதையும் மனுதர்மமும் பிரம்மாவின் முகத்திலிருந்து பிறந்தவன் பிராமணன் என்றும் மனிதப் பிறவிகளில் அவனே உயர்ந்தவன் என்றும் பெண்களும் சூத்திரர்களும் தாழ்ந்தவர்கள் என்றும் உரைக்கிறது. (மனுதர்மம் அத்தியாம் 1 சூத்திரம் 31 - பகவத் கீதை அத்தியாயம் 9 சுலோகம் 32)

நமது வள்ளுவரோ இதைக் கடுமையாக மறுத்து,

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமையான். (குறள் 972)


ஆரியர்களின் மனுதர்மம் புலால் உண்பதை அனுமதிக்கிறது. பசுக்களை யாகத்தில் வெட்டிப் பலியிடவேண்டும் என்றும் யாகத்தில் படைக்கப்பட்ட பசுவின் இறைச்சியை உண்பது தெய்வீகச் செயல் என்றும் உரைக்கிறது. (மனுதர்மம் அத்தியாயம் 5 சூத்திரம் 27 30 35 39).

இந்து மதத்தின் மிக முக்கிய நூலான பகவத் கீதை கொலை செய்வதையும் நியாயப்படுத்துகிறது.

இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டு காந்தியடிகளைக் கொலை செய்த குற்றத்திற்காக பார்ப்பனரான நாதுராம் கோட்சேயைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியபோது, அவர் கீதை காட்டும் இந்து தர்மப்படி காந்தியைக் கொலை செய்தது நியாயமே என்று கூறினார்.

இந்து மதம் நரபலிக்கும் நியாயம் கற்பிக்கிறது.மகாபாரதத்தில் குருட்சேத்திரப் போர் தொடங்குவதற்கு முன் பாண்டவர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அருச்சுனனின் புதல்வர்களில் ஒருவனான அரவானை கண்ணன் நரபலியிட்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பொதுவாக அன்றைய காலத்தில் பார்ப்பனர்களுடைய தோற்றம் தமிழர்களிடமிருந்து முற்றிலும் மாறுபட்டிருந்தது. தலைமுடியை முன்புறம் நன்றாக மழித்து பின்புறம் தலைமுடியை நீட்டி குதிரை வால் போன்று வளர்த்திருப்பார்கள். இத்தகைய பார்ப்பனர்களை வள்ளுவர் இவ்வாறு கடிந்து கொள்கிறார்.

மழித்தலும் நீட்டலும் வேண்டா உலகம்
பழித்த தொழித்து விடின் (குறள் 280)


உயரிய எண்ணம் கொண்ட வள்ளுவர் தேவர், பார்ப்பான் போன்ற சொற்களின் வழியாக ஆரியக் கருத்துகளை எதிர்க்கவும் மறுக்கவும் துணிந்திருக்கிறார் என்றால் சமத்துவத்திற்கும் சமூக நீதிக்கும் எதிரான ஆரியர்களுடைய வேதங்களும் புராண இதிகாசங்களும் வள்ளுவருக்கு ஒருவித சினத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

இந்துப் புராண இதிகாசங்களிலும் துதி பாடல்களிலும் கடவுளர்களின் அற்புதங்கள் கதை கட்டிவிடப்பட்டுள்ளன. மகாபாரதமும் தன் பங்கிற்கு பாண்டவர்களின் வெற்றிக்கு அருச்சுனன், பீமன், அபிமன்யு போன்றவர்களின் வீரத்தை முக்கிய காரணமாகக் காட்டாமல் கண்ணனின் அருளையே முக்கியமாகக் காட்டுகிறது.

தனி மனிதனுடைய வீரமும் முயற்சியும் பின்னுக்குத் தள்ளப்பட்டு கடவுள் தன்மைகள் முக்கியப் படுத்தப்பட்டிருக்கும். வள்ளுவரின் திருக்குறளோ இதற்கு நேர் எதிரான கருத்தைக் கூறுகிறது.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் (குறள் 619)


இந்து மதம் உடலை வருத்தி உழைக்காமல் பிறரிடமிருந்து யாசகம் பெற்று வயிறு வளர்க்க உதவும் புரோகிதத் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுகிறது.

திருக்குறளோ நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த ஏர் பூட்டி உழும் உழவர்களின் தொழிலையே சிறந்த தொழிலாகக் கூறுவதுடன் உலக மக்கள் உழவுத் தொழிலை நம்பித்தான் வாழ்கிறார்கள் என்கிறது.

இதோ அந்தக் குறள்

சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை (குறள் 1031)


தமிழரின் மறையான திருக்குறள் நெடுகிலும் இந்துத்துவ எதிர்ப்புக் கருத்துகள் நிறைந்து காணப்படுகின்றன. எனவே வள்ளுவர் ஓர் இந்துவாக நிச்சயம் இருக்க முடியாது.

இளங்கோ (இலண்டன்)

மூலம் : சிந்திக்க உண்மைகள் : http://idhuthanunmai.blogspot.com/2008/01/blog-post_23.html

Sathiyanarayanan said...

வள்ளுவர் மட்டுமல்ல திராவிடர்கள் எவரும் இந்துக்கள் அல்லர்


நன்றி: www.tvpravi.blogspot.com

சாணக்யன். said...

முதலில் இளங்கோ எந்த மதத்தினர் என்று தெரிந்து கொள்ளலாமா? அவர் எழுதுவதைக் கண்டால் பிற மதத்தினர் போலத் தோன்றினாலும் அவர் இந்துதான் என்பதில் ஐயம் இல்லை. ஆகவே கொள்கைகளுக்கும் மதத்திற்கும் சம்மந்தம் இல்லை.

இரண்டாவது, பகவத் கீதையின் ஒரு சில வாக்கியங்களை எடுத்துக் கொண்டு அது கொலை வெறியைப் பரப்புகிறது என்று கூறுகிறவர்களை என்னவென்று சொல்வது?

மகாத்மா காந்தி ஒரு இரவு முழுவதும் இரண்டு கன்னிப் பெண்களுடன் நிர்வாணமாகப் படுத்திருந்தார். இது உண்மை. ஆனால் என்ன சூழ்நிலையில், எதற்காக என்று ஆராயும்போதுதன் அதன் பின்னணி விளங்கும்.

"எப்பொருள் யார்யார்வாய் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு" என்ற வள்ளுவரின் குறளை மறந்து போனதற்கு யார் பொறுப்பு?

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீத்தல் அரிது

இந்தக் குறளை இயற்றியவர் யார் என்று தெரிகிறதா? சத்தியமாக அது சாணக்யன் இல்லை என்பது மட்டும் உண்மை.

இனிமேலாவது அரைவேக்காட்டுத்தனமாக, பகவத் கீதையை அரை குறையாகப் படித்து விட்டு தேவையில்லாமல் பேச வேண்டாம்.


அடுத்தது சத்திய நாராயணன் அவர்களுக்கு,

முதலில் திராவிடன் யார் என்பதைத் தெளிவாக்குங்கள். நீங்கள் சொல்லும் திராவிடன் என்ற சொல்லுக்கு தமிழர்கள், மலையாளிகள், தெலுங்கர்கள் மற்றும் கன்னடர்கள் எல்லாரையும் உள்ளடக்கிய தென் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பது அர்த்தம். ஆனால் இப்போது மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் யாரும் தங்களை திராவிடர்கள் என்று கூறிக் கொள்வதில்லையே? கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதை கேள்விப்பட்டதுண்டா? திராவிடர்கள் யாரும் இந்துக்கள் இல்லையென்றால், தைரியமாக இந்து மதத்தை விட்டு விட்டு உங்களுக்குப் பிடித்த, மனிதர்களிடையே வேற்றுமை காட்டாத ஒரு மதத்தில் சேர்ந்து விட்டு, இந்து மதத்தில் பிறந்ததால் கிடைத்த சலுகைகள் எதுவும் எனக்கு வேண்டாம் என்று கூறத் தயாரா?

இந்து மதத்தில் உள்ள சாதியை (பிரிவினை, வேற்றுமை என்பது எல்லா மதங்களிலும், எல்லா நாடுகளிலும் உள்ளது. இது பற்றி வேறு சமயத்தில் சிந்திப்போம், சந்திப்போம்) குறை கூறும் நீங்கள், அதனால் கிடைக்கின்ற சலுகைகளை உதறத் தயாரா?

சாணக்யன்.

Thursday, January 24, 2008
ஈழப் போராட்டம் சர்வதேசக் குற்றமா?

இந்தக் கேள்விக்குப் பதில் சொல்ல வேண்டியவன் நானல்லன்; அமெரிக்காவும் பிரிட்டனும்.

பாலஸ்தீனம் அரபுகளின் தேசம். இரண்டாம் உலகப் போரில் யூதர்களுக்குக் கொடுத்த வாக்குறுதிக்காக அரபுகளைக் கொன்று அங்கே யூதர்களைக் குடியமர்த்தினார்கள். துண்டாக்கப்பட்ட தேசம் ரெண்டாக்கப்பட்டது. பாதி அரபிகளுக்கு; பாதி யூதர்களுக்கு.

உரிமையே இல்லாத யூதர்களுக்கு ஒரு நீதி; உரிமை உள்ள தமிழர்களுக்கு ஒரு நீதியா? யூதர்களின் கண்ணில் வெண்ணெய்; தமிழர்களின் கண்ணில் சுண்ணாம்பா?

அமெரிக்காவும் பிரிட்டனும் அரபிகளையும் அணைத்துக் கொண்டன; யூதர்களையும் இழுத்துக் கொண்டன. ஏனென்றால் யூதர்களுக்குப் பெரிய மூளையிருக்கிறது. அரபிகளிடம் பெட்ரோல் இருக்கிறது. பாவம் தமிழன்! இவனிடம் என்ன இருக்கிறது?


16.01.2008 குமுதம் இதழில் வாசகரின் கேள்வியும் வைரமுத்துவின் பதிலும்.

சாணக்யன் கூறுகிறார்:

"கவிப் பேரரசு" வைரமுத்து அவர்களே. யூதர்கள் என்பவர்கள் யார்? அவர்கள் எந்த தேசத்தைச் சேர்ந்தவர்கள்? பாலஸ்தீனம் என்ற தேசம் உருவாவதற்கு முன்னர், அங்கு இருந்த தேசம் என்ன? இந்த உண்மைகளையெல்லாம் மறைக்கப் பார்த்தால் முடியுமா?

யூதர்கள் யாவருக்கும் தற்போதைய இஸ்ரேல் நாடுதான் பூர்வீகம். காலப் போக்கில் அவர்கள் சொந்த மண்ணை விட்டு பல நாடுகளுக்கும் நாடோடிகளாத் திரியத் தலைப்பட்டனர். எந்த நாட்டிற்குச் சென்றாலும், தங்கள் ஒற்றுமையாலும், புத்தி சாதுர்யத்தாலும் நன்றாக வாழ்ந்தனர்.

அது மட்டுமல்லாமல் இன்னொரு கேள்வியையும் எழுப்பியுள்ளார் "கவிப் பேரரசு". அது "பாவம் தமிழன்! இவனிடம் என்ன இருக்கிறது?"

கவிப்பேரரசு அவர்களே! தமிழனிடம் என்ன இல்லை? எல்லா வளங்களும் இருக்கிறது. அறிவிலே யாருக்கும் சற்றும் சளைத்தவனல்ல தமிழன். ஆற்றலிலேயும் யாருக்கும் குறைந்தவனல்லன் தமிழன்.

ஆனால், அவனிடம் இல்லாதது என்ன தெரியுமா? அதுதான் ஒற்றுமை. அத்துடன் பிறர் வாழப் பொறாமை. தன்னினத்தையே காட்டிக் கொடுக்குமளவுக்கு அது வளர்ந்து விட்டது.




சாதிகள்

சமீபப் பதிவுகளில், சாதிகள் இந்து மதத்திற்கே உரித்தானவை போலவும், பிற மதங்களில் எல்லாரும் சமம் என்பது போலவும் சித்தரிக்கப் படுகிறது. அது மட்டுமல்லாமல், பகவத்கீதை ஒரு கொலை வெறி பிடித்த நூல் என்றும் வர்ணிக்கப்படுகிறது. எல்லாவற்றுக்கும் "பார்ப்பன ஆதிக்கம்" தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

நிழல் பிம்பங்களோடு, அட்டைக் கத்தியுடன் பொய்ச்சண்டை போடும் வாய்ச்சொல் வீரர்கள்.

இதைப் பற்றிய ஒரு விரிவான கட்டுரை விரைவில் வெளியிடப்படும்.

அன்பர்களுக்கு நன்றி.

Wednesday, January 23, 2008

மத்திய அமைச்சர் கனிமொழி வாழ்க வாழ்க

கனிமொழி அமைச்சர் பதவிக்கு ஆசைப்படவில்லை. அவர் அமைச்சராவார் என்று வருகிற செய்திகள் உண்மையல்ல. அவை வதந்தியும் யூகமும் தானே தவிர வேறொன்றுமில்லை. அமைச்சர் ஆவதற்கு கனி ஆசைப்படவுமில்லை, அவரசப்படவுமில்லை.

முத்தமிழ் வித்தகர் கலைஞர் தானே கேட்டு தனக்காகக் கூறிய பதில.

சாணக்யன் கூறுகிறார்: ஐயா புல்லரிக்குதுங்கோ, இப்படித்தான் கனிமொழி அரசியலுக்கு வர ஆசைப்படவில்லை, அவர் M P ஆவார் என்பதெல்லாம் வெறும் வதந்தி என்று கூறினீர்கள். சில நாட்களிலேயே அவர் பதவியேற்றார் ராஜ்ய சபா M P ஆக. அதனால், கூடிய விரைவிலேயே மத்திய கேபினெட் அமைச்சராக கவிதாயினி கனிமொழியைப் பார்க்கக் கூடிய புண்ணியம் தமிழர்கள் எல்லோருக்கும் உண்டு என்பது நிச்சயம். என்ன தவம் செய்திருக்க வேண்டும் இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம். கழகம் என்பது ஒரு குடும்பம் என்று அடிக்கடி கூறுவீர்களே, அதற்கு அர்த்தம் கழகம் என்பது "ஒரு குடும்பம்" என்பது எங்களுக்குப் புரிய லேட்டாயிட்டுதுங்க.

மறுபடியும் எனக்கு ஒரு சந்தேகம் ஐயா, உங்கள் மகள் கனிமொழியின் தோழி என்று இப்போது வந்துள்ள ஒரு புதிய கவிஞர் தமிழச்சி அவர்கள் தமிழ் மேல் உள்ள மிகுந்த ஆர்வத்தால் சுமதி என்ற தனது பெயரைத் தமிழச்சி என்று மாற்றிக் கொண்டுள்ளார்கள் என்று கேட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். இதில் சந்தேகம் என்னவென்றால், அவர்களுக்கு தமிழ்ப் பற்று எப்போது வந்தது? சிறு வயதிலிருந்தேவா? அல்லது பள்ளிப் பருவத்திலா? அல்லது கல்லூரிப் பருவத்திலா? அல்லது வேலைக்குச் செல்லும்போதா? அல்லது தனது தோழி பாரளுமன்ற உறுப்பினர் ஆன பிறகா? ஏன் கேட்கிறேன் என்றால், கல்லூரியில் முதுகலை ஆங்கில இலக்கியம் படித்தவர்தான் இந்த தமிழச்சி. ஆங்கில இலக்கியத்தின் மேல் ஆர்வம் கொண்டு படித்தவர், கல்லூரியில் படிக்கும் போது தனது பெயரை "ஆங்கிலச்சி" என்று வைத்திருந்தாரோ? தமிழ் படிக்கக் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்று மற்றும் கூறி விடாதீர்கள் பெருந்தகையே! அது மட்டுமல்ல, ராணி மேரிக் கல்லூரியில் வேலை செய்ததும் ஆங்கில இலக்கிய விரிவிரையாளராக. அப்போது என்ன பெயர் வைத்திருந்தார்? இல்லை வழக்கம் போல தமிழுக்கு "வெளியிலுருந்து" ஆதரவு தெரிவித்திருந்தாரோ? அல்லது தாங்கள் பா.ஜ.க. உறவைத் துண்டித்துக் கொண்டு காங்கிரஸுடன் மறுபடியும் கை கோர்த்த போது கூறினீர்களே அது போலவா?

Tuesday, January 22, 2008

பாரத ரத்னா

சாணக்யன் கூறுகிறார்: யார் யாரோ பாரத ரத்னாவுக்கு போட்டி போடும்போது, நான் ஒருவன் இருப்பதையே மறந்து விட்டீர்களே? பரவாயில்லை. இப்போது குறித்துக் கொள்ளுங்கள். "எனக்கு பாரத ரத்னா வேண்டவே வேண்டாம்". கொடுத்தாலும் நான் வாங்க மாட்டேன்.

அடுத்தவனுக்குத்தான் அறிவுறை


தமிழ்நாட்டில் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கிடையேயுள்ள சிறிய வித்தியாசங்களைப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். -- எ.பி.பரதன், காபிடலிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (முந்நாள் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா)
பரதன் ஐயா, முதலில் நீங்கள் ஆட்சியிலுள்ள மேற்கு வங்காளத்தில், உங்கள் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் பிச்சிக்கிட்டு போகுதுங்கோ, அதை கவனிங்கோ, கம்யூனிஸத்தைக் காற்றில் பறக்க விட்டு விட்டு இப்போது இடது சாரி ஒற்றுமையைப் பற்றிப் பேசவேண்டாமே, மக்கள் இனிமேலும் ஏமாறத் தயாராக இல்லை.

Monday, January 21, 2008

வின்னர் வடிவேலு காமெடி

வின்ன்ர் வடிவேலு காமெடியைச் ச்ற்று ஞாபகப்படுத்திக் கொள்ளவும். இப்போது வடிவேலு இருந்த இடத்தில் திரு.பிரகாஷ் கரத், கேபிடலிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (முன்னாள் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா) மற்றும் ரியாஸ் கான் இருந்த இடத்தில் திரு.மன்மோகன் சிங், எதற்கு பிரதம மந்திரி ஆக இருக்கிறோம் என்றே தெரியாத ஒரு பி.ம்.


கரட்.(வடிவேலு): எவண்டா பெட்ரோல், டீசல் விலையை ஏத்துவேன் என்று சொன்னது?

சிங்(ரியாஸ் கான்): சரியா காதில் விழவில்லை, பார்லிமெண்டில் வந்து சொல்லு.

கரட்: நாங்க என்னிக்குமே பார்லிமெண்டிலே பிரச்சினை பண்ண மாட்டோம், எதுவாயிருந்தாலும் ரோட்டோட முடிச்சுக்குவோம், நாங்க இருக்கும் வரைக்கும் விலையை ஏத்த விட மாட்டோம்


சிங்: போன வருஷம் தானே நாலு முறை விலையை ஏத்தினோம்

கரட்: அது போன வருஷம்; நான் சொன்னது இந்த வருஷம்

சிங்: ஏத்தினா?

கரட்: மன்மோகன் சிங், நீ மட்டும் உண்மையான பிரதம மந்திரிஆக இருந்தா விலையை ஏத்திப் பாரு.

(மன்மோகன் சிங் விலையை ஏற்றுகிறார்)

கரட்: ஒத்துக்கிறேன், நீ ஒரு பிரதம மந்திரிதான்னு ஒத்துக்கிறேன், மறுபடியும் அடுத்த விலையேற்றத்திலே சந்திப்போம்.



------------------------------------------------------------------------------

பின் குறிப்பு 1: நண்பர்களே, நாம்தான் உண்மையிலேயே காமெடியன் ஆக்கப் பட்டோம். விலை ஏறத்தான் போகிறது. எவ்வளவு விலை ஏறினாலும், நாம் பெட்ரொல் போடாமல் இருக்க முடியாது.


பின் குறிப்பு 2: எதற்கும் பத்து ரூபாய் நோட்டுக்களாக சில்லறை மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து, காப்பிடலிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா (மெக்டொனல்ட்ஸ்) போராட்டம் நடத்த உண்டி குலுக்கி வருவார்கள். தாராளமாக உதவுங்கள்.

Long live Capitalism. Long live McDonalds.

Sunday, January 20, 2008

பெர்த்தில் பெற்ற வெற்றி

சீண்டி விட்டால்தான் சிறப்பாக விளையாடுவோம் என்று மறுபடியும் காண்பித்து விட்டனர் நம் (அ)சிங்கங்கள். ஐயா ஒவ்வொரு தடவையும் சீண்டி விடுவதற்கு ரிக்கி பாண்டிங் வர முடியுமா? வடிவேலு மனதில் பார்த்திபனை நினைத்தவுடனே அலறுவது போல ரிக்கியையும், சைமண்ட்ஸையும் எப்பவும் நினைச்சுக்கோங்க. வெற்றி எப்பவும் நமக்குத்தான்.   (அது சரி, கோடி கோடியாக சம்பாதிப்பது பத்தாதா? சீண்டி விடுவதற்கும் ஒரு ஆள் போட்டு அதற்கும் ஒரு தண்டச் செலவா?)  குடுக்கற காசுக்கு ஒழுங்கா விளையாடி மானத்தைக் காப்பாத்துங்கய்யா

Tuesday, January 15, 2008



"Socialism is defunct. We need Capital and Capitalism" - The Grand Old Man of Communism Mr.Jyoti Basu.

"We need Foreign Investment in Retail Sector" - Chief Minister of West Bengal Mr.Bhattacharya.

"We will NOT allow Foreign Investment in Retail Sector" - Mr.Prakash Karat, MP, CPI(M)


What is happening here? The Communist Party is talking in many voices, but all contradicting its own ideology.

Chanakyan has a suggestion to the Communists.

Better change your name to Capitalist Party of India (McDonalds)


But as the old saying goes, Everything happens for the better. What else can be better than the complete disintegration and decimation of the communist parties in India?

A suggestion for the Readers. Please read "Animal Farm' By George Orwell, in which he had described how Communists were born and how they will transform themselves into Capitalists once again.


Saturday, January 12, 2008

காமராஜர் அரங்கத்தில் மோடி பேசலாமா? காங்கிரஸ் கட்சி புலம்பல்: சாணக்யன் பேசுகிறார். காங்கிரஸ்காரர்களே, இது மக்களாட்சி. மக்கள் விரும்புபிறவர்கள்தான் நாடாள வேண்டுமே தவிர, நீங்கள் தூக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற குடும்பம்தான் நாடாள வேண்டும் என்று நினைத்தால் நடக்காது.
நரேந்திர மோடி மக்களால் மூன்றாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர். அவரை அவமதிப்பது, அவரைத் தேர்ந்தெடுத்த கோடிக் கணக்கான மக்களையும் அவமதிப்பது போலாகும். ஏற்கனவே குஜராத்தில் வாங்கிய அடி போதாதா? மறுபடியும் குஜராத்திகளை அவமதித்து, வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டுமா?
அரசியல் என்பது 10, ஜன்பத் சாலை என்ற அரண்மனையோடு முடிந்து விடுவதாக நினைத்துக் கொண்டிருப்பதை முதலில் மாற்றுங்கள். கழுதை ஏற்கனவே கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆகி விட்டது. இதிலும் தேய்ந்தால், என்ன ஆகும்?
தை மாதம் 1ம் தேதி தான் இனி தமிழ் புத்தாண்டாக இருக்கும். தமிழக முதல்வர் அறிவிப்பு: ஐயா முதல்வர் அவர்களே, இதுதான் தமிழர்களின் பெரிய கவலையாக இருந்தது. சட்டம் போட்டு இதை மாற்றி விட்டால் தமிழ்நாட்டின் பிரச்சினைகள் எல்லாம் தீர்ந்து விடும். பசி பட்டினி எல்லாம் மாயமாக மறந்து விடும் மிகவும் நன்றி.
நாட்டில் ஏராளமான பிரச்சினைகள் இருக்க, இவருக்குக் கிடைத்தது பார் ஒரு அருமையான யோசனை.



ஐயா, கலைஞர் அவர்களே, எந்த நாள் தமிழ் புத்தாண்டாக இருந்தாலும், ஏழை மக்களுக்கு என்ன வந்தது? அதெல்லாம் உங்களைப் போல ஆயிரம் கோடிகளைச் சேர்த்து வைத்திருக்கும் "சாமானியர்"களுக்குத்தானே தவிர எங்களைப்போல அன்றாடம் உழைத்தால்தான் சோறு என்றிருக்கும் பணக்காரர்களுக்கு இல்லை. வாழ்க கழகம் sorry குடும்பம். (கழகம் ஒரு குடும்பம் என்று சொல்வதன் அர்த்தம் கழகம் "ஒரு குடும்பம்" மட்டும் தானா?)

Friday, January 4, 2008

The whole country, especially Media that calls itself the Country, is up in arms against the Mumbai Police Chief for his delayed action and also his casual remark that "It happens everywhere".  Well, there were some 50-80 men, according to various estimates, who outraged the modesty of two women in an inebriated condition.  But what action can be taken against those same Media, which showed the video clippings of the incident and published the photographs and outraged the modesty of the same two girls before millions of public all over the country and the whole world?

What about those spineless idiots, who, instead of saving the girls, just went on to shoot it on their cameras and mobiles? What about those who shared the video on you  tube in the guise of raising their voice in support of the girls but actually satisfying their vicarious pleasure in seeing and making public those video clips?

Media, again, has gone so low that it can never redeem itself. All it does is for publicity and revenue and TRP rating, nothing else.  Everything is business for them.

Watch "15 Minutes" by Robert De Nero, you will agree with me.